Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இப்போ வீட்டிலேயே டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி செய்யலாம் !!!

வாழைக்காய் பஜ்ஜி

தேவையான  பொருட்கள் :

வாழைக்காய் – 2

கடலை மாவு – 2 கப்

கார்ன்ஃப்ளவர் – 2 டேபிள்ஸ்பூன்

அரிசிமாவு – 1 டீஸ்பூன்

சோம்பு தூள் – 1/2  டீஸ்பூன்

பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மிளகாய்தூள் – 2  டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

ஆப்ப சோடா –  1  சிட்டிகை

ஃபுட் கலர்  –  தேவையான அளவு

வாழைக்காய் பஜ்ஜி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் வாழைக்காயின்  தோலை நீக்கி , மெல்லிய  துண்டுகளாக  நறுக்க  வேண்டும் . கடலை மாவு , கார்ன்ஃப்ளவர் ,அரிசிமாவு ,சோம்பு தூள் ,பூண்டு விழுது , மிளகாய்தூள்  , ஃபுட் கலர் ,  உப்பு மற்றும் சோடா சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ள  வேண்டும் . ஒரு கடாயில்   எண்ணெயை காய வைத்து , வாழைக்காயை மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான வாழைக்காய் பஜ்ஜி  தயார் !!!

Categories

Tech |