கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடராக, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆஜராவதற்கு விளக்களிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது. ஆகஸ்ட் 8ஆம் தேதி கண்டிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.