கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடருக்கு காரணம் பருவநிலை மாற்றமே என பலர் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழையானது ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் கடைகள், அலுவலகங்களில் வெள்ளம் புகுந்து சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் வெள்ளத்தில் மூழ்கி மின்சாரம் இணைப்பு தூண்டிக்கப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த பாதிப்பிற்கு பருவநிலை மாற்றமே காரணம் என பலர் குரல் எழுப்பியுள்ளனர். இதற்கு ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டு தலைவரும் இந்திய வம்சாவளி அமைச்சருமான அலோக் ஷர்மா இது குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் 50க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் மின்சார தேவைக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரியே பருவநிலை மாற்றத்திற்கு காரணமென்பதால் அதை கைவிடுவது குறித்து பேசியுள்ளனர். ஆனால் அதில் எந்தவொரு பயனுமில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் அலோக் ஷர்மா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 26ஆவது ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டை பிரித்தானியா வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் நடத்தவுள்ளது. அதில் புவி வெப்பமயமாதலை 1.5c குறைக்க அனைத்து நாடுகளும் சம்மதிக்க வேண்டும். ஆனால் அதற்கு முதலில் G20 நாடுகள் நிலக்கரி பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று அலோக் ஷர்மா தெரிவித்துள்ளார்.