முதலீட்டாளர்கள் கைரேகை மூலம் டீமேட் ஆரம்பித்திருந்தால் நாமினிக்கு ஒரு சாட்சி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாமினி விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று செபி கேட்டுக்கொண்டுள்ளது. நாமினி விவரங்கள் தெரிவிப்பதன் மூலம், ஒருவரின் மரணத்திற்குப் பிறகு டீமேட் கணக்கில் உள்ள பங்குகள் யாருக்குச் செல்ல வேண்டும் என்பதை தெரியப்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். ஒருவரின் ஆயுள் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நாமினி விவரங்களை மாற்றி அமைக்க முடியும். அதனால், முதலீட்டாளர்கள் தமது நாமினி விவரங்களை தவறாது தெரியப்படுத்துவது அவசியமாகும்.
Categories