Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எப்ப பாரு இப்படித்தான்” ஆத்திரமடைந்த பொதுமக்கள்…. உறுதியளித்த அதிகாரிகள்….!!

குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக  குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கோவமடைந்த பொதுமக்கள் திடிரென சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் நகராட்சிப் பொறியாளரான ஜீவா சுப்ரமணியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |