உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பீகார், ஆந்திரா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.