வெளிநாட்டில் ஒரு நபர், வேலைக்காக ஒரு நிறுவனத்திற்கு அனுப்பிய பயோடேட்டாவில் குறிப்பிட்டிருந்த திறமை அனைவரையும் கவர்ந்துள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனத்திற்கு, வேலைக்காக விண்ணப்பித்தால், அங்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கும். அதில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை மட்டுமே அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் நேர்காணலுக்கு சென்று, அதில் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.
இந்நிலையில் வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் பணிக்காக தன் சுயவிவரத்தை(Bio-data) ஒரு நிறுவனத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு திறமையால் கவரப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
அப்படி என்ன திறமை வைத்திருந்தார் அவர். அதாவது தனித்திறமைகைகளில் “Googling” என்று பதிவிட்டிருக்கிறார். இது தான் அதிகாரிகளை வெகுவாக கவர்ந்துவிட்டது. இச்சம்பவத்தை அந்நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இந்த ட்விட்டை பார்த்த இணையதளவாசிகள் அந்த நபரை பாராட்டி வருகிறார்கள். மேலும் அந்த ட்விட்டும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.