எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ரெட்மி புக் லேப்டாப் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் ரெட்மி நிறுவனம் அடுத்து லேப்டாப் பிரிவுகளிலும் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெட்மி புக் லேப்டாப் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த லேப்டாப் குறித்த முக்கிய அம்சங்கள் தற்போது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த லேப்டாப் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என்பதால் லேப்டாப் ரசிகர்கள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.