கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகே இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற நபர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் மற்றவர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் ரெயிலடி கிட்டப்பா பாலம் வேதம்பிள்ளை காலனியை சேர்ந்த ராசமாணிக்கம்(25) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராசமாணிக்கம் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.