Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து வரும் புலம்பெயர்வோர் பிரச்சனை!”.. பிடிவாதம் பிடிக்கும் பிரான்ஸ்.. பிரிட்டனுக்கு ஏற்பட்ட தலைவலி..!!

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து நுழைந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை பிரான்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை.

பிரிட்டன் நாட்டிற்குள், பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாயின் வழியே படகுகளில் பயணித்து புலம்பெயர்ந்த மக்கள் புகுந்து வருகிறார்கள். இது தொடர்ந்து வருவதால், பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் பிரிட்டன் அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதாவது, ஆங்கில கால்வாய்க்குள் புகும் புலம்பெயர்ந்த மக்களின் படகுகளை நிறுத்தி, அதனை பிரிட்டன் எல்லையை தாண்டி விட்டுவிடவேண்டும் என்பது தான் இத்திட்டம். ஆனால் இதனை பிரான்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை. ஏற்கனவே புலம்பெயர்ந்த மக்கள் பிரிட்டனுக்குள் நுழைவது  அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

மேலும் கடந்த வாரத்தில் பிரிட்டனின் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல், 54 மில்லியன் பவுண்டுகள் பிரான்சிற்கு அளித்து புலம்பெயர்ந்தவர்களை தங்கள் நாட்டிற்குள் நுழைவதை கண்காணிக்க அதிக காவல்துறையினரை நிறுத்துமாறும், ட்ரோன்கள் விடுமாறும் கோரினார்.

எனினும் பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றம், ட்ரோன்கள் உபயோகிக்கக்கூடாது என்று அறிவித்ததால், அவரின் திட்டம் வேலைக்கு ஆகவில்லை. தற்போது புலம்பெயர்ந்த மக்கள் பயணிக்கும் படகுகளை எல்லையை தாண்டி அனுப்பும் திட்டத்தையும் பிரான்ஸ் அரசு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் புலம்பெயர்ந்த மக்கள், பிரிட்டன் நாட்டிற்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறார்கள்.

Categories

Tech |