தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ரேஷன் அட்டை மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிப்பதற்கும் ரேஷன் கார்டு மிகவும் அவசியம். தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 நிவாரணம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆதார் கார்டும் மிக முக்கியமாகும். ஒரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் கார்டு பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் கார்டு எடுக்க முடியாத அளவுக்கு உடல் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகள், புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கும், ஏற்கனவே உள்ள கார்ட்டில் உறுப்பினராக சேர்வதற்கு, ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இணையதளத்தில் https://tnpds.gov.in/ விண்ணப்பிக்கும் போது மாற்றுத்திறனாளி வகையில், கண், விரல் என ஏதேனும் ஒரு பாதிப்பை தேர்வு செய்தபின் மாற்றுத்திறனாளிக்கான ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.