Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் பயங்கர வெடிவிபத்து.. வானளவு உயர்ந்த புகை.. மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..!!

ஜெர்மனி நாட்டில் இருக்கும் ரசாயன பூங்கா ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி, Leverkusen என்ற பகுதியில் இருக்கும் ரசாயன பூங்காவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் வான் அளவிற்கு கரும்புகைகள் பரவியதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். எனினும் அப்பூங்காவின் அதிகாரிகள், விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது தெரியவில்லை என்றே கூறுகிறார்கள்.

எனவே, அதிகாரிகள், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்கள். இக்கொடூர விபத்தில் ஒரு நபர் பலியானதாகவும், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், 5 நபர்கள் மாயமானதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |