Categories
பல்சுவை

ரிலாக்ஸா ஒரு கதை கேட்போமா…. வாங்க பார்க்கலாம்…!!!

பழங்காலத்தில் ஒரு ராஜ்ஜியம் இருந்தது. அந்த ராஜ்யத்தை ஆண்ட ராஜாவின் கருவூலத்தில் செல்வம் கொட்டிக் கிடந்தது. ஆனாலும் அங்கு செல்வதில் ராஜாவிற்கு திருப்தியில்லை. இந்த நினைவுடன் ஒருநாள் அவர் வேட்டைக்குச் சென்றார். மான், சிங்கம், கரடி என வேட்டையாடி தீர்த்த ராஜாவுக்கு கலைப்பு ஏற்படவே ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினார். அப்போது ராஜாவுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஒரு மனிதன் தோன்றி ” நான் உங்களுக்கு விலைமதிப்பற்ற செல்வத்தை தருகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு” என்றார்.

7 பெரிய ஜாடிகளை உங்களுக்கு தருகிறேன். அவற்றில் ஆறு ஜாடிகளில் பொற்காசுகள், வைரங்கள், வைடூரியம், விலைமதிப்பற்ற கற்கள் நிரப்பப்பட்டன. ஏழாவது ஜாடி பாதி மற்றும் நிறைந்துள்ளது. உங்களிடம் உள்ள பணத்தில் இந்த ஏழாவது ஜாடியை நிரப்பினால் இந்த ஏழு ஜாடிகளையும் நன்றாக பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டு மறைந்தார். ராஜா மகிழ்ச்சியுடன் கண்விழித்து பார்த்தபோது அவர் எதிரில் 7 பெரிய ஜாடிகள் தங்கத்தால் பளபளத்ததை கண்டார். அவ்வளவு பொன்னையும், பொருளையும் பார்த்ததற்கு மயக்கமே வந்துவிட்டது. ராஜா மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னிடமிருந்த பணம், நகைகள் அனைத்தையும் அந்த ஏழாம் ஜாதியில் வைத்தார்.

ஆனால் ஜாடி நிரம்பவில்லை. இன்னும் பாதி காலியாக இருந்தது. அரண்மனைக்கு திரும்பிய ராஜா தன் ராஜ்யத்தின் ஒரு நாள் வருமானம் முழுவதையும் அந்த ஜாடியில் போட்டார். ஜாடி நிரம்பவில்லை. அடுத்த ஒரு வார வருமானம், ஏன் ஒரு வருட வருமானத்தை கொட்டியும் ஜாடி நிரம்பவில்லை. பொறுமையிழந்த ராஜா தான் கருவூல செல்வம் அனைத்தையும் ஜாடியில் கொட்ட தயாரானார். அவரை தடுத்து நிறுத்திய அமைச்சர் ” அரசே இந்த ஏழாவது குடுவை உங்கள் மனதை போன்றது என்பது புரிகிறதா?” இது மனிதனின் பேராசையை போல் எப்போதும் நிறையாது என்றார். ராஜா அந்த உண்மையை உணர்ந்துகொண்டார்.

கதையின் நீதி:
திருப்தி இல்லாத மனதை, எதனாலும் திருப்திபடுத்த முடியாது.

Categories

Tech |