Categories
மாநில செய்திகள்

அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை… எடப்பாடி பழனிச்சாமி…!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தனியாக புறப்பட்டு சென்ற அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் சூழல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசி வருவதாக தகவல் வெளியானது.

சந்திப்பிற்கு பின்னர் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி மரியாதை நிமித்தமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்ததாகவும், இதில் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Categories

Tech |