Categories
தேசிய செய்திகள்

ALERT: முழு ஊரடங்கு…. அரசு பெரும் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் கடந்த வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் அதிகமாக பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் மட்டுமே தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் மேல் பதிவாகி வருகின்றது.

அதன்படி, கேரளா 7, மணிப்பூர் 5, மேகாலயா 3 ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பின் வார சராசரி தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், கடந்த வாரங்களில் குறைந்த விகிதத்தை ஒப்பிடும்போது சற்று மெதுவாகவே குறைந்து வருகின்றது. 54 மாவட்டங்களில் கொரோனா பரவல் சதவீதம் 10%-க்கும் அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.4% ஆக உயர்ந்துள்ளது” என்று லால் அகர்வால் கூறினார்.

Categories

Tech |