நாடு முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது உயிரிழந்த கைதிகளின் ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 5,569 கைதிகள் நீதிமன்றம் மற்றும் காவல்துறையின் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். நீதிமன்ற காவலில் 5,221 பேரும், காவல்துறை காவலில் 348 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 232 கைதிகளும். காவல்துறை காவலில் 25 பேரும் உயிரிழந்துள்ளனர் . மொத்தத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்..
Categories