Categories
உலக செய்திகள்

இது ஆட்சி கவிழ்ப்பு சதி… பதவி நீக்கப்பட்ட பிரதமர்… எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!!

துனிசியா நாட்டின் பிரதமர் அந்நாட்டில் கொரோனாவை முறையாக கையாளாத காரணத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் 18 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதாரத்திலும் துனிசியா மிக மோசமான நிலையை அடைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி கொரோனா தொற்றை முறையாக கையாளாதது தான் இந்த நெருக்கடியான நிலைக்கு காரணம் என்று கூறி பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் துனிசிய அதிபர் கையீஸ் சையத் தொலைக்காட்சி வாயிலாக அந்நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், பிரதமர் பதவி நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல் மீண்டும் நாட்டில் வன்முறை அதிகரித்தால் ராணுவ சக்தியுடன் அதற்கு பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கையீஸ் சையத் மற்றும் ஹிச்சம் மெச்சிச்சி ஆகிய இருவருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்த சூழலில் அதிபர் கையீஸ் சையத் பிரதமரை பதவி நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அதிபர் கையீஸ் சையத்-ன் இந்த நடவடிக்கை ஆட்சி கவிழ்ப்பு சதி என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Categories

Tech |