Categories
உலக செய்திகள்

“கழிவறை முழுக்க இரத்தம்!”.. மகளுக்கு என்ன ஆயிற்று.. பதறிப்போன தாய்..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர், தன் மகளிடம் யாரும் தவறாக நடந்திருப்பார்களோ என்று பயந்த நிலையில் சிறுமிக்கு சிறுநீரக புற்றுநோய் இருந்தது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் தெற்கு கரோலினாவில் வசிக்கும் 32 வயது பெண் Lauren Ouzts Lee.  இவரின் வீட்டின் கழிவறையில் சில தினங்களாக இரத்தம் கிடப்பதைப்பார்த்து, பயந்திருக்கிறார். எனவே, உறவினர்களிடம் கேட்டிருக்கிறார். அப்போது அவரின் மகளான Emma, அது என் இரத்தம் தான் என்று கூறியிருக்கிறார்.

இதனால் மிகவும் பயந்த Lauren, தன் மகளிடம், உன் ரகசிய உறுப்பை எவரேனும் தொட்டார்களா? என்று கேட்டிருக்கிறார். ஐந்து வயதே ஆகும், அவரின் மகள் Emma அதெல்லாம் இல்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார்.  மேலும் கடந்த சில தினங்களாகவே, சிறுநீருடன் இரத்தமும் வெளியேறுவதாக கூறியுள்ளார்.

உடனடியாக மகளை மருத்துவமனை அழைத்துச் சென்றதும், சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கூறிய மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்கள். எனினும் Emma குணமாகவில்லை. கடும் வலியால் அவதிப்பட்டிருக்கிறார்.

இதனால், Emma-விற்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அரிய வகை சிறுநீரக புற்றுநோய் சிறுமிக்கு இருந்தது தெரியவந்துள்ளது. எனவே 4 மணி நேரம் அறுவை செய்யப்பட்டது. பாதிப்படைந்த சிறுநீரகத்தை நீக்கினர். மேலும், கீமோதெரபி சிகிச்சை 6 மாதங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால், emma-வின் முடிகள் கொட்டியது. அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். தற்போது, சிகிச்சை நடந்து 3 வருடங்கள் ஆனது. சிறுமிக்கு ஒரு சிறுநீரகம் இல்லை. எனவே விளையாடும்போது கவனமுடன் இருக்க வேண்டும். எனினும் சிறுமிக்கு பிற பிரச்சினைகள்  இல்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் தற்போது, emma-விற்கு அழகாக, சுருண்ட முடி வளர்ந்து, முன்பை விட அழகாக இருக்கிறார்.

Categories

Tech |