இன்று மாலை ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் பகுதியில் மாலை 4.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் சுமார் 188 கிலோ மீட்டர் தொலைவில் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் பைசாபாத் பகுதியிலிருந்து உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சேதாரங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.