Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறு…. சாதகமாக பயன்படுத்திய தலிபான்கள்…. பலரும் உயிரிழந்த சோகம்….!!

தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ளும் போது திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஹெல்மண்ட் என்னும் மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அதன் காவல்துறை தலைமை அதிகாரியையும் சிறை பிடித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

அப்போது திடீரென ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் ஹெல்மெண்ட் மாவட்டத்தில் அவசர அவசரமாக அதனை ராணுவத்தினர்கள் தரையிறக்கியுள்ளார்கள். இதனை சாதமாக பயன்படுத்திய தலிபான் பயங்கரவாதிகள் ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.

இதில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பலரும் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக தலிபான்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இந்த விபத்தில் எவரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |