Categories
தேசிய செய்திகள்

PM ஆவாஸ் யோஜனா திட்டத்தில்…. வீட்டு மானியம் பெற…. ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது…???

நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம் வழங்கும் திட்டம் வழங்கிவருகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில்  PMAY Urban மற்றும் PMAY Gramin என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது கூட இந்த திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? என்று பார்க்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது:

இந்த திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற்றவராக இருந்தால் இத்திட்டத்தின் http://pmaymis.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.

பின்னர் மெயின் மெனுவின் கீழ் உள்ள “Citizen Assessment” என்பதை கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

இதையடுத்து வரும் திரையில் விண்ணப்பதாரரின் ஆதார் விவரங்களைப் பதிவிட வேண்டும்.

பின்னர் உங்களின் தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரி போன்றவற்றுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு எல்லா விவரங்களையும் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும்.

உங்களின் விண்ணப்ப நிலவரத்தை “Track your Assessment Status” என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Categories

Tech |