கங்கை நதிக்கரையில் சாம்பலை கரைப்பதற்கு பதிலாக Saskatchewan நதியில் கரைக்கப்படும் என்று Saskatoon நகரம் அனுமதி தந்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து கனடாவில் வாழும் இந்துகள் மற்றும் சீக்கியர்களும் கொரோனாவால் அவர்களது உறவினர்களின் இறுதிச் சடங்கிற்காக இந்தியாவிற்கு போக முடியாத சூழல் உருவாயிற்று. மேலும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இறந்தவர்களின் சாம்பலை கங்கை ஆற்றில் கரைப்பது வழக்கம். ஆனால் கனடாவில் உள்ள இந்துக்கள் தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்கிற்கு இந்தியாவிற்கு செல்ல முடியாமல் இருந்தனர்.
இதனால் அவர்களின் சாம்பலை கனடாவிலும் கரைக்க முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் Saskatoon நகரத்திலுள்ள தெற்குப் பகுதியில் Saskatchewan நதியில் தங்களின் உறவினர்களின் சாம்பலை கரைக்க அனுமதி கிடைத்துள்ளது. இந்த செய்தியானது கனடாவில் வாழும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மன ஆறுதலை தரும் என்று Saskatoon நகரம் கூறியுள்ளது.