ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 72 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மதுவிலக்கு காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர்.
அதன்படி அனுமதியின்றி மது விற்பனை செய்த 44 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த 410 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 28 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.