Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே தான் இருந்தேன்… திடீரென தீப்பிடித்த வீடு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைத்தொழிலாளியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் செல்வம்(55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைத்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு வெளியே வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது குடிசை வீடு தீப்பிடித்து இருந்துள்ளது.

இந்த தீ விபத்தில் உள்ளே இருந்த பதநீர் காய்ச்சும் தளவாடங்கள் போன்ற சுமார் 25,000 மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது. இதனையடுத்து செல்வம் இச்சம்பவம் குறித்து சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |