Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இறுதி சடங்கு அன்று…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மனைவி இறந்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெசவுத்தொழில் பார்த்து வந்துள்ளார். இவருக்கு பொன்னி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் பொன்னி உயிரிழந்து விட்டார். இந்நிலையில் கோதண்டன் தனது மனைவி இறந்ததால் மன வேதனையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து தனது மனைவியின் இறுதிச்சடங்கு அன்று கோதண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதன்பின் உறவினர்கள் கோதண்டனை உடனடியாக மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோதண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குடியாத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |