பணத் தேவை, முதலீடு, சேமிப்பு, கடன், டெபாசிட், பணபரிவர்த்தனை என அனைத்து வகையான தேவைகளுக்கும் வங்கிகள் முக்கிய இடமாக செயல்படுகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை கொடுக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதுபோக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஆகஸ்ட் 1 – ஞாயிறு
ஆகஸ்ட் 8 – ஞாயிறு
ஆகஸ்ட் 14 – இரண்டாம் சனி
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 – முஃகர்ரம்
ஆகஸ்ட் 22 – ஞாயிறு
ஆகஸ்ட் 28 – நான்காம் சனி
ஆகஸ்ட் 29 – ஞாயிறு
ஆகஸ்ட் 30 – கிருஷ்ண ஜெயந்தி