நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷுடன் நடிப்பது தான் தனது மிகப்பெரிய கனவு என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் கடந்த 22-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் துஷாரா விஜயன்.
தற்போது இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த துஷாராவிடம் எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு துஷாரா ‘நடிகர் தனுஷுடன் நடிப்பது தான் என் மிகப்பெரிய கனவு’ என தெரிவித்துள்ளார்.