தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரே கடையில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சில சங்கங்கள் ஒரே ஒரு ரேஷன் கடை நடத்துவதால் அங்கு பணிபுரியும் ஊழியர் வேறு கடைக்கு மாற்ற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.