கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மறுபக்கம் இருக்கும் நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பும் தற்போது அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில் கேரளத்தில் உள்ள 7 மாவட்டங்கள் உட்பட இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா கவலை அளிக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. மேலும் மழைக்கால நோய்கள் வரக்கூடும் என்பதால் வரும் நாட்களில் கொரோனாவை சமாளிப்பது சவாலான பணியாகும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.