Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் மட்டும் தான்…. இனி பணம் அனுப்ப முடியும்…. எஸ்பிஐ அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் தொடங்கிய நகர்ப்புறங்கள் வரை எல்லா பகுதிகளிலும் ஏடிஎம் வசதி என்பது அத்தியாவசிய தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களின் அவசரமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏடிஎம்கள்  முக்கிய பங்கு வகித்து வந்தன. இதையடுத்து ஏடிஎம்மில் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதிக்கு உங்களுடைய செல்போனில் எஸ்பிஐ வங்கியின் யோனா செயலி இருந்தால் மட்டுமே போதும்.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான யோனா ஆப்பின் புதிய வெர்ஷன் வெளியாகிறது .இதில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த ஆப்பை பயன்படுத்துவதற்கு ஒரு கண்டிஷன் உள்ளது. அதாவது யோனா ஆப் பயன்படுத்தும் பயனர்கள் செல்போன் எண்ணை பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும். புதிதாக இணைபவர்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பரை பயன்படுத்தவேண்டும்.

வங்கியில் கொடுக்கப்பட்ட செல்போன் நம்பரை பயன்படுத்தி மட்டுமே இந்த யோனா ஆப்பை பயன்படுத்த முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதில் கடன்களுக்கு விண்ணப்பிப்பது, டிஜிட்டல் வங்கி கணக்கு திறப்பது, ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. இதில் கடனுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Categories

Tech |