Categories
தேசிய செய்திகள்

சில்லறை கடைக்காரர்களுக்கு…. ரூ.10 லட்சம் கடன் கொடுக்குறாங்க…. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த ககொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் மற்றும் சிறு குறு தொழில் செய்பவர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் கடைக்காரர்களுக்கு தொடர்ந்து கடை நடத்துவதற்கான நிதி இல்லாமல்  இருக்கிறது. இந்த சூழலில் அவர்களுக்கு உதவும் வகையில் ஹெச்டிஎப்சி வங்கி ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கடைக்காரர்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் கடன் வாங்குவதற்கு  விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய 6 மாதத்திற்கான எந்தவொரு பேங்க் ஸ்டேட்மெண்ட் விவரங்களை இந்த  வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த ஆவணங்களையும் வழங்க தேவை கிடையாது. 6 மாதத்திற்கான பேங்க் ஸ்டேட்மென்ட்களை வழங்கும் வங்கியின் வாடிக்கையாளராக 15 மாதங்களுக்கு இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் விதிமுறை. கடைக்கு சொந்தமானவர் மற்றும் பாட்னர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும். எனவே கடன் தேவைப்படும் கடைக்காரர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து கடன் பெற்றுக் கொள்ள இதுவே நல்ல வாய்ப்பு.

Categories

Tech |