மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று பாக்கிகள் வசூலாகும்.
பணத்தேவைகள் பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வில்லங்கங்கள் விலகிச்செல்லும்.
இன்று நினைத்தது முடியும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். இன்று கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். செய்யும் வேலையில் தெளிவு பிறக்கும். இன்று ஆலயம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளமஞ்சள் நிறம்.