விருச்சிகம் ராசி அன்பர்களே.! மற்றவர்களுக்கு அறிவுரை எதுவும் சொல்ல வேண்டாம்.
இன்று நண்பரின் உதவியால் பெருமை கொள்வீர்கள். செயலில் புதிய திருப்பங்களும் ஒரு புதிய அறிவும் உண்டாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி புரிவீர்கள். அதிகப்படியான உடல் உழைப்பு இருக்கும். இனிய அணுகுமுறையால் பணவரவு சீராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும். தடைகள் ஏற்பட்டாலும் உங்களால் சிறப்பாக செயல்பட முடியும். புத்தி சாதுரியத்தால் உங்களால் சிறப்பாக செயல்பட முடியும். அனைத்து விதமான கஷ்டங்களையும் முறியடித்து வாழ்க்கையில் வெற்றி பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். தாய்வழி உறவுகளுடன் சின்ன கருத்து மோதல்கள் ஏற்படலாம். நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற சிறிது நேரம் போராட வேண்டியிருக்கும்.
மற்றவர்களுக்கு அறிவுரை எதுவும் சொல்ல வேண்டாம். பேச்சில் தெளிவு வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வரும். அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காதல் விவகாரங்களில் மனம் கஷ்டப்படும். காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் எழும். விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனைகள் சரியாகும். மாணவர்களுக்கு நினைத்தது நடக்கும். கல்வியில் அக்கறை இருக்கும். கல்வியில் முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு