Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது.!!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அதன்படி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத் துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Image result for Dadasaheb Phalke Award for Bollywood actor Amitabh Bachchan

மேலும் 2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்குவதால் நாடே மகிழ்கிறது என்று கூறினார். இந்த விருதினை 1996-ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசனுக்கும் , 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தருக்கும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |