பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த குஷ்கர்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சிக்னலில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. கொரோனா காலத்தில் இந்த பிச்சைக்காரர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை உருவாகும். இதனால் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.
தெருக்களில் பிச்சை எடுப்பவர்களை தடுக்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் ஏன் பிச்சை எடுப்பதற்கு வருகிறார்கள்? வறுமை வாட்டும் பொழுது அவர்கள் தெருவுக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அவர்களை தடுப்பதற்கு உரிமை இல்லை. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இது ஒரு சமூகப் பிரச்சினை. இதற்கு சமூக நல கொள்கைகளை வகுத்து தீர்வுகாண வேண்டும் என்று தெரிவித்தார். பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்க கூடிய திட்டங்களை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.