நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று (ஜூலை 28ஆம் தேதி) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்தார். மேலும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இன்றும், தமிழகம் முழுவதும் நாளை முதலும் இந்த திட்டம் தொடங்குகிறது என்று கூறினார். இந்நிலையில் இன்று முதல்வர் தனியார் மருத்துவமனைகளின் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.