Categories
சினிமா தமிழ் சினிமா

 “தாதாசாகேப் பால்கே விருதுக்கு தகுதியானவர்”… அமிதாப் பச்சனை புகழ்ந்த ரஜினி.!!

நடிகர் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரை துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்குவதால் நாடே மகிழ்கிறது என்றும்  கூறினார்.

Image result for dadasaheb-phalke-award-for-bollywood-actor-amitabh-bachchan

இதையடுத்து தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அமிதாப் பச்சனுக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,  பெருமதிப்புக்குரிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு நீங்கள் தகுதியானவர் என்று பாராட்டியுள்ளார்.

Categories

Tech |