செய்யும் தொழிலில் தொடர்ச்சியாக நஷ்டம், ஏமாற்றம் நிறைந்து காணப்படும் பலரும் மிகுந்த சோர்வுக்கு ஆளாகிவிடுவார்கள். என்ன செய்தாலும் அதிலிருந்து மீண்டு எழ அவர்கள் படாதபாடு படவேண்டியிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு காலத்தின் மீது நம்பிக்கை இருக்குமானால் இந்த வழிமுறையை பின்பற்றி இழந்த செல்வத்தை மீட்டு, இருப்பதை தக்க வைத்துக்கொள்ளவும், செழிப்படையவும் முடியும்.
ஜோதிடத்தில், புதன் என்பது புத்தியின் கிரகம். சரியான நேரத்தில் தேவையை உணர மரகதம் உதவுகிறது. வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், கணினி ஊழியர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மரகதங்கள் நன்மையை அளிக்கும்.
ஒரு ரத்தினத்தை வாங்கும் போது, தெளிவான, சேதமில்லாத கற்களை தேர்வு செய்வது அவசியம். ஜாதகத்தில் புதன் மந்தமாகவோ, பலவீனமாகவோ இருந்தால் இந்த ரத்தினம் நன்மை பயக்கும். மாணவர்களுக்கு கல்வி அறிவு சிறப்பாக அமையும். ஞாபக சக்தியை அதிகரிக்கச்செய்யும்.
பத்தாவது அம்சம் வேலையின் நிலை. ஜாதகத்தின் பத்தாவது வீட்டில் புதன் இருந்தால், நிச்சயமாக மரகதம் அவரது வாழ்வை வளமாக்கும். அது வேலை, வியாபாரம், சேவை எதுவாக இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டும்.
ஜாதகத்தின் படி, உழைக்கும் ஒவ்வொரு நபருக்கும் தங்கள் துறையில் பிரகாசிக்க சாதகமான ரத்தினம் உள்ளது.
அதே போல், தனி நபர் ஒருவர் தமது ஜாதகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், உகந்த ரத்தினங்களை பயன்படுத்துவது நல்லது.