பெண்களே உங்கள் கணவரிடம் இதை மட்டும் நீங்கள் செய்யாமல் இருந்தால் உங்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தங்களுடைய துணைவர் ஒரு விஷயத்தை உணர்ந்திருப்பார், வருத்தப்படுவார் என்பதை தெரிந்தும் பெண்கள் மீண்டும் அதே தவறுகளை செய்து கொண்டிருப்பார்கள். ஒரே தவறை பலமுறை திரும்பச் செய்யும் பொழுது அதில் உறவு விரிசல் அடைய செய்கின்றது. காதல் வாழ்க்கையில் மனமுடைந்து போவதையோ அல்லது கண்ணீரையோ சந்திக்கவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. ஆனால் ஒரு சில தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யும் பொழுது நாம் நமக்கு பிடித்தவர்களிடம் இருந்து விலகிச் செல்ல நேரிடுகின்றது. அப்படி பெண்கள் செய்யக்கூடிய தவறுகள் இதோ.
நச்சரிப்பு: ஆண்களை விட பெண்கள் அதிகமாக நச்சரிப்பார்கள் அல்லது தொந்தரவு செய்கிறார்கள் என்பது உண்மையாகும்.ஒரே விஷயத்தைப் பற்றி எப்பொழுதுமே நீங்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அவர் உங்களை சிறிதளவு கூட மதிக்க மாட்டார்.
துரத்துதல்: நீங்கள் உங்கள் கணவரிடம் கையாளக் கூடிய சண்டைகளை மட்டுமே போட வேண்டும். அவரை மீண்டும் திரும்ப முடியாத நிலைக்கு நீங்கள் சண்டை போட்டால் மீண்டு எழுவது மிகவும் கஷ்டம்.
புகழ்ந்து பேசுவது இல்லை: பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மற்றவர்கள் தங்களைப் புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் உங்கள் கணவரை அடிக்கடி புகழ்ந்து சில வார்த்தைகளைப் பேசினால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆக்ரோஷமாக இருக்காதீர்கள்: நீங்கள் அமைதியாக இருப்பது போல் தோற்றமளித்தாலும், உண்மையில் நீங்கள் ஆக்ரோஷமானவராக இருப்பீர்கள். பெண்கள் எப்பொழுதுமே முன்பு நடந்த விஷயங்களை மனதில் வைத்து கொள்வார்கள். இதனை கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வரும்போது கூறி மீண்டும் சண்டையைப் பெரிதுபடுத்திவிடுவார்கள்.
மிரட்டுதல்: ஒவ்வொரு சண்டைக்கு பிறகும் நான் தூக்குப் போட்டுக் கொள்கிறேன் அல்லது தற்கொலை செய்து கொள்ள போகிறேன். வீட்டைவிட்டு வெளியே போகிறேன் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தால், உண்மையில் ஒரு நாள் பெட்டியை பெட்டி படுக்கையுடன் கிளம்ப வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.
அன்னையார்: பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அன்னையருடன் பாசமாக இருப்பார்கள். ஏனெனில் அது புதிதாக வந்த உறவு கிடையாது. அப்படி இருக்கும்பொழுது அவரிடமே அவரது அம்மாவை பற்றி குறை பேசுவதை நிறுத்தி விடுங்கள்.
கணவரை புரிந்துகொள்ளுங்கள்:
முடிந்த அளவுக்கு உங்களது கணவனின் வாழ்க்கை முறையை குறை கூறாமல் இருங்கள். ஒவ்வொரு ஆணும் மற்றொரு பெண்ணிடம் மாறுபட்டு இருப்பதைப் போலவே, ஆண்களும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட வராக இருக்கிறார். எனவே அவர்களை எல்லாம் ஒரே தட்டில் வைத்து எடை போடவேண்டாம், அவர்களுடைய உணர்வுகளை ஒரே மாதிரியாக எண்ண வேண்டாம்.