Categories
தேசிய செய்திகள்

வருமான வரித் தாக்கல்.. மொபைலிலேயே ஈசியா செய்யலாம்… எப்படி தெரியுமா…? வாங்க பாக்கலாம்….!!

நம்முடைய செல்போனிலேயே ஈசியாக வருமான வரி தாக்கல் செய்து கொள்ள முடியும். அது எப்படி என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில், நிவாரணம் அளிக்கும் வகையில் 2021-22 ஆம் ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவு வழங்கியுள்ளது. இதன்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நம்மால் வீட்டில் இருந்தபடியே ஈஸியாக செல்போனில் அல்லது கணினியில் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். மொபைலில் வருமான வரி தாக்கல் செய்ய ஏதுவாக ‘Aaykar Setu’ ஆப்பை வருமான வரி துறை அறிமுகம் செய்துள்ளது.

இதில் வருமான வரி தாக்கல் செய்யும் முறை எளிமைப் படுத்தப் பட்டுள்ளது. வரி தாக்கல் செய்வது மட்டுமல்லாமல் பல்வேறு வசதிகளும் உள்ளது. இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நம்மால் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். வரியைக் கணக்கிடுவது, வீட்டு வாடகை படி கணக்கிடுவது போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ள தனி விளையாட்டு என பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது. 161 ஆவது வருமான வரி தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது வருமான வரி தாக்கல் செய்வது, வரி செலுத்துவது போன்றவற்றை எளிமைப்படுத்த வருமான வரித்துறை மேற்கொண்ட முயற்சிகளை நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Categories

Tech |