சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை காற்றில் மாசு ஏற்படுத்தும் துகள்கள் அளவு அதிகரித்துள்ளதுடன், சிலிக்கா, மாங்கனீசு மற்றும் நிக்கல் உள்ளிட்ட ஆபத்தான துகள்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இவை நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. அதிலும் குறிப்பாக திரிசூலம், வியாசர்பாடி, பாரிமுனை ஆகிய இடங்களில் காற்று மாசு அதிகம் காணப்படுகிறது. அதனால் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories