தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இறப்புகள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று கொரோனா இறப்பு ஒன்று கூட இல்லை. பிற மாவட்டங்களில் மக்கள் கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறி தோன்றிய உடனேயே மருத்துவமனையை அணுகினால் எளிதாக குணப்படுத்தலாம் என கூறியுள்ளது.