Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல்…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் பொறியியல் படிப்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு செமஸ்டர் காண வகுப்புகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெறும். 2, 3 மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 18ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து டிசம்பர் இரண்டாம் தேதி செய்முறை தேர்வுகளையும், டிசம்பர் 13ஆம் தேதியிலிருந்து செமஸ்டர் தேர்வுகளையும் தொடங்க அறிவுறுத்தியுள்ளது. அடுத்த செமஸ்டர் காண வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |