தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு மெத்தனமாக இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவினர் தங்களுடைய வீடுகள் முன்பு பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.