தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியுள்ளது. இதனால் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.