தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை அரசுக்கு வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த பாலம் என்ற வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளதா கவும், பொதுமக்கள் 9445456035என்ற வாட்ஸ்அப் எண் மூலம் கருத்துக்களைப் பகிரலாம் என கூறியுள்ளது.