இந்தியாவிலிருந்து கப்பலின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 5 கண்டெய்னர் நீர் எருமை இறைச்சிகளில் 3 ல் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்ததை கம்போடிய நாட்டின் சுகாதார துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
கம்போடிய நாட்டிற்கு கப்பலின் மூலம் இந்தியாவிலிருந்து 5 கண்டெய்னர்களில் சென்ற நீர் எருமை இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்திய கம்போடிய அரசு அதிகாரிகள் நீர் எருமை இறைச்சிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.
இந்த பரிசோதனையின் முடிவில் 5 கண்டெய்னர்களில் 3 ல் உள்ள நீர் எருமை இறைச்சியில் கொரோனா தொற்றின் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை கம்போடியாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சகம் பாதிக்கப்பட்ட 3 கண்டெய்னரிலுள்ள நீர் எருமை இறைச்சிகள் அடுத்த வாரத்தில் அழிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.