குளிப்பதற்காக சென்ற சிறுவன் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம் பட்டி பகுதியில் விவசாயியான கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பாஸ்கர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணேசன் தனது மாடுகளுக்குத் தேவையான புற்களை அறுப்பதற்காக பாஸ்கருடன் இணைந்து வயலுக்குச் சென்றார். அப்போது பாஸ்கரன் தனது தந்தையிடம் கிணற்றில் குதித்து குளித்துவிட்டு வருவதாக கூறி சென்றுவிட்டார். இதனையடுத்து பாஸ்கரன் குளிப்பதற்காக சென்ற நீண்ட நேரமாகியும் வராததால் தனது மகன் வீட்டிற்கு சென்றிருப்பான் என்று நினைத்து கணேசனும் புற்களை அறுத்து கொண்டு சென்றுள்ளார். அங்கு கணேசன் வீட்டிற்கு சென்றபோது தனது மகனான பாஸ்கர் இல்லாததை கண்டு உடனடியாக கிணற்றுப் பகுதி சென்றுள்ளார்.
அப்போது கிணற்றுப் பகுதியில் பாஸ்கரனின் ஆடைகள் மட்டும் மேலே இருப்பதை பார்த்து தனது மகன் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இருப்பானோ என அதிர்ச்சியடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சிறுவனான பாஸ்கரனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அந்த கிணற்றுக்குள் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சிறுவனான பாஸ்கரனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிணற்றுக்குள் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றிய பிறகு தீயணைப்பு வீரர்கள் சிறுவனான பாஸ்கரனின் காலில் கொடிகள் சுற்றிய நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கணேசனிடம் நடத்திய விசாரணையில் சிறுவனான பாஸ்கரனுக்கு நீச்சல் தெரியும் என்பதால் தான் கிணற்றுக்குள் குதித்து குளிப்பதற்கு அனுமதித்தேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் கிணற்றுக்குள் இருந்த கொடிகள் பாஸ்காரனின் கால்களில் சுற்றி கொண்டதால் சிறுவனால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.