நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தொழில் நிறுவங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொத்தடிமை ஆக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் நிறுவனங்களில் கொத்தடிமை முறை உள்ளதா என்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இதுகுறித்த வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் கொத்தடிமை முறையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க உதவியாக அனைத்து நிறுவனங்களிலும் மாநில கட்டுப்பாடு மைய இலவச தொலைபேசி எண்ணை 1800 4252650 காட்சிப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் அரசு வழக்கும் நிவாரணங்கள் அவர்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.