லண்டன் விமான நிலையத்திலிருந்து 5 மில்லியன் பவுண்டுகளை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லண்டனில் Tara Hanlon ( 30 ) எனும் பெண் ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு செல்வதற்காக லண்டன் விமான நிலையத்தில் பெட்டியுடன் நின்றுள்ளார். அப்போது அதிகாரிகள் சிலர் சந்தேகத்தின் பேரில் அவருடைய பெட்டியை சோதித்து பார்த்துள்ளனர். அந்த சோதனையில் அவர் 1.9 மில்லியன் பவுண்டுகளை துபாய்க்கு கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது.
மேலும் இதற்கு முன்னதாக 3.5 மில்லியன் பவுண்டுகளை துபாய் மாகாணத்திற்கு அந்த பெண் திருட்டு தனமாக கடத்தி சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வேலைக்காக அவர் வெறும் 3000 பவுண்டுகளை ஊதியமாக வாங்கியுள்ளார். இதையடுத்து லண்டன் காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.